மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மாயம்

14

பலாங்கொடை கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த மண்சரிவு நேற்றையதினம் (12.11.2023) ஏற்பட்டுள்ளது.இந்த மண்சரிவில் தந்தை, தாய் மற்றும் அவர்களது இரு மகள்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இந்த மண்சரிவில் சிக்கியுள்ளார்களா அல்லது வெளியேறிவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த மண்சரிவினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Join Our WhatsApp Group