ஜப்பானில், மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால், கடந்த 20 ஆண்டுகளில் 8,580 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவ்வாறு மூடப்பட்ட சில பள்ளிகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.அந்தப் பள்ளிகளில் இருந்த சில வசதிகள் கைவிடப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, விளையாட்டு மைதானம்.அதனைப் பயன்படுத்தும் பிள்ளைகளுக்கு ஆபத்து வரலாம் என்ற காரணத்தால் அவை மூடப்பட்டன.சில பள்ளிகளில் இருந்த நீச்சல் குளங்களில் தற்போது வாத்துகளும் தட்டாம்பூச்சிகளும் வலம்வந்து கொண்டிருக்கின்றன.எனினும், மூடப்பட்ட மேலும் சில பள்ளிகள் பொது நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பெற்றோர், பிள்ளைகளுக்கான பட்டறைகளை நடத்தவும், படப்பிடிப்புத் தளங்களாகவும் அவை மாறியுள்ளன.இதன்வழி நகராட்சித் துறைக்கு வருமானம் கிடைக்கிறது.பேரிடர்க் காலங்களில் பொது மக்கள் தஞ்சமடையக்கூடிய இடங்களாகவும் அந்தப் பள்ளிகள் பயன்படுத்தப்படலாம்.
மொனாக்கோவை (Monaco) அடுத்து உலகின் ஆக மூப்படைந்த மக்களைக் கொண்ட நாடாக ஜப்பான் விளங்குகிறது.ஜப்பானில் 15 வயதுக்குக் குறைவான பிள்ளைகளின் எண்ணிக்கை 14.4 மில்லியன் பேர்.மொத்த மக்கள் தொகையில் அந்த எண்ணிக்கை 11.5 விழுக்காடு!