வியட்நாம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 18 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.அவர்களில் இருவர் தென்கொரியர்கள். ஒருவர் சீனக் குடிமகன்.தென்கொரியர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரி என்று வியட்நாம் அரசாங்க ஊடகம் கூறியது.
2020ஆம் ஆண்டு மே முதல் ஜூன் வரை அந்தக் குழுவினர் சுமார் 216 கிலோகிராம் போதைப்பொருளைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததாகவும் கடத்தியதாகவும் அது சொன்னது.168 கிலோகிராம் எடையுள்ள அனைத்து வகை போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அது குறிப்பிட்டது.அவை கம்போடியாவிலிருந்து ஹோ சி மின் நகருக்குக் கடத்தப்பட்டதாகவும் உள்நாட்டில் கொஞ்சம் பயன்படுத்தப்பட்டதாகவும் வியட்நாம் அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
எஞ்சியவை தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டன.தென்கொரியாவுக்கு அனுப்பப்படவிருந்த ஒரு கொள்கலனில் இருந்த போதைப்பொருளை வியட்நாம் அதிகாரிகள் கண்டறிந்தது குறித்து நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.