பாரம்பரிய சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு அந்த வயல் நிலங்களின் முழுத் தனியுரிமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
குத்தகைக்கு வழங்கிய வீடுகளை வசிப்பவர்களுக்கு உரிமையாக்க தீர்மானம்
நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வாடகை வசூலிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த வீடுகளின் உரிமையை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். – PMD
தோட்டங்களில் வாழும் மக்களுக்கு காணி உரிமைகளை கொடுக்க 4 பில். ஒதுக்கீடு
தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ரூபா 4 பில்லியன் ஒதுக்கீடு.
பிம் சவிய வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நிதி ஒதுக்கீடு
பிம் சவிய வேலைத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்க 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும். – PMD