நீட் தேர்வு சமூகத்திற்கு எதிரானது- கவிஞர் வைரமுத்து கருத்து

15

கையெழுத்து இயக்கத்தில் எல்லா தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவும் நீட் தேர்வுக்கு எதிரான இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டார்.
சென்னை:

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக கையெழுத்து போட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். நீட் தேர்வுக்கு எதிரான இந்த கையெழுத்து இயக்கத்தில் எல்லா தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

இதையொட்டி கவிஞர் வைரமுத்துவும் நீட் தேர்வுக்கு எதிரான இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டார். இதுகுறித்து அவர் பதிவிட்ட கருத்துக்கள் வருமாறு:-

நீட் தேர்வுக்கு எதிராக எனது கையெழுத்து இடம் பெறுவதில் மகிழ்ச்சி. தேர்வு எழுதியே மாணவர்கள் வாழ்நாள் கழிந்து விடுகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட் தேர்வு சமூகத்திற்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது. மாணவர்களுக்கு எதிரானது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

Join Our WhatsApp Group