தீபாவளிக்காகப் பிரகாசித்த நியூயார்க்கின் Empire State கட்டடம்

15

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரபல Empire State கட்டடம் தீபாவளிக்காக ஆரஞ்சு நிறத்தில் ஒளியூட்டப்பட்டுள்ளது.நியூயார்க், நியூ ஜெர்சி, கனக்டிகட் ஆகிய மாநிலங்களுக்கான இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Associations) அதற்காக ஏற்பாடு செய்தது.

மேன்ஹட்டனின் ஆகப் பழைமையான ஆலயமான பக்தி நிலையத்தில் அந்நகர மேயர் எரிக் ஆடம்ஸ் (Eric Adams) இந்துக்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.அங்குத் தீபாவளியைக் கொண்டாட சுமார் 1,500 பேர் கூடியதாக The Hindustan Times செய்தி நிறுவனம் கூறியது.

தீபாவளிப் பண்டிகையின்போது மட்டுமல்லாமல் அனைத்து நேரங்களிலும் உலகம் முழுவதும் ஒளியைப் பரப்புவது முக்கியம் என்றார் திரு. ஆடம்ஸ்.இந்த ஆண்டு ஜூன் மாதம் தான் அவர் நியூயார்க் நகரில் தீபாவளிப் பண்டிகையைப் பள்ளி விடுமுறையாக அறிவித்தார்.

Join Our WhatsApp Group