சமூக பாதுகாப்புகளுக்கான கொடுப்பனவு 3 மடங்கு அதிகரிப்பு

11

கடந்த வருடங்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 60 பில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 2024ஆம் ஆண்டில் அது 183 பில்லியன் ரூபா வரை, மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. – PMD

அஸ்வெசும பலன்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படுபவர்களுக்கு கொடுப்பனவு

அஸ்வெசும பலன்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு கடந்த காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை. – PMD

ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு

ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோய் உதவித்தொகை 2,500 ரூபாவினால் அதிகரிக்கப்படும். – PMD

BUDGET 2024: முதியோருக்கான கொடுப்பனவு 3000 ரூபாய் வரை அதிகரிப்பு

முதியோருக்கான மாதாந்த உதவித்தொகை 3000 ரூபா வரை அதிகரிக்கப்படும். – PMD

BUDGET 2024: 06 மாதங்களுக்கு ஒரு முறை, அஸ்வெசும பயனாளிகளின் பட்டியல் மதிப்பாய்வு

புதிய குடும்பங்கள் பயனாளிகள் பட்டியலில் தாமதமின்றி இணைத்துக்கொள்ள 06 மாதங்களுக்கு ஒரு முறை, அஸ்வெசும பயனாளிகளின் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும். – PMD

BUDGET 2024#29

ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கத் திட்டம்

அஸ்வெசும வேலைத்திட்டம், ஊனமுற்றோர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக 2024 இல் ஒதுக்கப்படும் தொகை, 205 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்படும். – PMD

BUDGET 2024: கர்ப்பிணிகளுக்கான கொடுப்பனவில் மாற்றமில்லை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் 4500 ரூபா மாதாந்த கொடுப்பனவை முறையாக தொடர்ந்து வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. – PMD

BUDGET 2024: தொழில் முயற்சியாளர்களுக்கு
சலுகைக் கடன் வசதி

கடந்த காலத்தில் நெருக்கடியை எதிர்கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் திட்டத்தை வலுப்படுத்த 30 பில்லியன் ரூபா சலுகைக் கடன் வசதி. – PMD

Join Our WhatsApp Group