2024 வரவு செலவுத் திட்ட இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் ஜனாதிபதி

19
  • ஜனாதிபதியினால் நாளை (13 ) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நாளை (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு மற்றும் சமர்ப்பிப்பு தொடர்பாக தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இன்று (12) காலை கலந்துகொண்டார்.

இதில், நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சமன் அதாவுதஹெட்டி, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மதுஷங்க திசானாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Join Our WhatsApp Group