முதல் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற இந்தியா

16

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 160 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்து ஆட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 410 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிகபடியாக Shreyas Iyer ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்களை பெற்றதுடன், KL Rahul 102 ஓட்டங்களையும் பெற்றார்.

பந்து வீச்சில் நெதர்லாந்து அணி சார்பில் Bas de Leede 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 411 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 47.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Teja Nidamanuru அதிகபட்சமாக 54 ஓட்டங்களையும், Sybrand Engelbrecht 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Jasprit Bumrah, Mohammed Siraj, Kuldeep Yadav, Ravindra Jadeja ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் Virat Kohli மற்றும் அணியின் தலைவர் Rohit Sharmaவும் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன்படி இந்த உலக கிண்ண தொடரில் முதல் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group