கைது செய்யப்பட மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பணி இடைநிறுத்தம்

17

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

உடன் அமுலாகும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உட்பட மூவர் கடந்த வெள்ளிக்கிழமை (10) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டனர்.

சுற்றாடல் அனுமதி வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ஒரு கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி, கைது செய்யப்பட மூவரும் நேற்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நாளை (13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Join Our WhatsApp Group