வாழ்க்கையில் பிரகாசம், ஒளிமயமான எதிர்காலம், எண்ணம், சொல், சிந்தனையில் தேங்கிக் கிடந்த இருள் அகன்று புது வெளிச்சம் தோன்றுவதாக நம்பிக்கையூட்டி தெளிவை ஏற்படுத்தும் ஒரு அர்த்தபூர்வமான பண்டிகையாக இந்துக்களால் இன்று(12) தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.
நாடு என்ற வகையில் நாம் கடந்த இரு வருடங்களில் எதிர்கொண்டிருந்த இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஔி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில் நாட்டிற்காகவும் சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் எனவும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
அனைவர் வாழ்விலும், இன்பமும் நலமும் உண்டாகட்டும்!
உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் பண்டிகைகளில் தீபாவளி முக்கிய இடத்தை வகிக்கிறது.
எமது மனத்துள்ளே இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் இந்துக்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
