Blue Flag Projects: கடலில் ஹோட்டல் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வேலை திட்டம்: அமைச்சர் மனுஷ தொடக்கி வைப்பு

16

உனவடுன கடற்கரைக்கு கூடுதலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீல டஜ என்ற திட்டத்தை முன்னெடுத்து, நேரடியாக, இந்தப்பகுதி கடலில் கழிவுகள் மற்றும் கழிவுநீரை வெளியேற்றும் ஹோட்டல்கள் அனைத்தையும் பரிசோதித்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை பிரதேச சபை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும உத்தரவிட்டுள்ளார்.

கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் Blue Flag Projects நீல ஜய என்ற திட்டத்தில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து உனவட்டுவேயில் இன்று (10) நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் இந்த விடயத்தை வலியுறுத்தினார.

நீல டஜ திட்டத்தின் கீழ், உனவடுன கடற்கரைக்கான நீல டஜ செயல்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் தயாரிப்பதற்காக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த செயலமர்வில் காலி மாவட்ட செயலாளர், கரையோர பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், மாகாண சபையின் பிரதம செயலாளர், ஹபராதுவ பிரதேச செயலாளர்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கடல் சுற்றாடல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Join Our WhatsApp Group