இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வின் கோபால், நியூ ஜெர்சி மாகாணத்தின் செனட்டராக மூன்றாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான வின் கோபால், நியூ ஜெர்சியில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது இளங்கலை படிப்பை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முடித்திருக்கிறார். அதோடு ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
நியூ ஜெர்சி மாகாணத்தின் 11ஆவது காங்கிரஸ் மாவட்டத்தில் குடியரசு கட்சி சார்பில் போட்டியியிட்ட வின் கோபால், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஸ்டீவ் டினிஸ்ட்ரியனை விட 60 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று தோற்கடித்தார்.
இந்த தொகுதி அதிக செலவினம் கொண்ட தொகுதியாக கருதப்படுகிறது. இதனால் பொதுமக்களால் அதிகம் கவனிக்கப்பட்டது. வின் கோபால் (38-வயது} நியூ ஜெர்சி மாநில செனட் அவையின் மிக இளைய உறுப்பினர் என்றும் அம்மாநில வரலாற்றிலேயே தேர்வு செய்யப்பட்ட முதல் தெற்காசிய அமெரிக்கரும் இவர் என்றுதான் தகவல் கூறுகிறது.
நியூ ஜெர்சி மாகாணத்தில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் 40 மாவட்டங்களில் இருந்து, 120 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செனட் அவையில் ஒரு உறுப்பினரும், பிரதிநிதிகள் அவையிலிருந்து 2 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
செனட் அவை உறுப்பினர் 4 ஆண்டுகளும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர் 2 ஆண்டுகளும் பதவி வகிப்பார்கள். முதல் முதலில் 2017 ஆம் ஆண்டு செனட் சபைக்கு வின் கோபால் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவிட் சமயத்தில் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த இவர் ஆற்றிய பணிகள் பெருமளவு அனைவரையும் கவர்ந்தது.