நல்லூரில் வீதித்தடை

19

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி உற்சவ காலத்தையொட்டி வீதிகள் தடை செய்யப்படவுள்ளன என்று யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 17 திகதி வரை மற்றும் 19 ஆம் திகதிகளில் பிற்பகல் 5 மணி தொடக்கம் 6 மணிவரையும் 18 ஆம் திகதி சூரன்போரன்று நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 7 மணிவரையும் ஆலய சுற்று வீதி தடைசெய்யப்படவுள்ளது.

பொது மக்கள் வீதியைப் பயன்படுத்துவோர் மாற்றுப் பாதைகளை வழமைபோல் பயன்படுத்துமாறு மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group