ரோபோவால் நசுக்கப்பட்டு உயிரிழந்த நபர்

24

தென் கொரியாவில் ரோபோவால் நபர் ஒருவர் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அந்த ரோபோவை சோதனை செய்து கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காய்கறி பெட்டிகளை பேக் செய்யும் போது உணவுப் பெட்டிகளில் இருந்து தொழிலாளியை வேறுபடுத்திப் பார்க்கத் தவறிய ரோபோ, அவரைப் பிடித்து, அவரது உடலை கன்வேயர் பெல்ட்டில் தள்ளி, அவரது முகத்தையும் மார்பையும் நசுக்கி கொன்றதாக கூறப்படுகின்றது.விபத்தின் பின்னர் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.

Join Our WhatsApp Group