ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனிற்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிப்பு.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தினால் 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி.
ஒப்போ நிறுவனம் பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் தனது ரெனோ 8T ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது 120Hz டிஸ்ப்ளே, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு தற்போது 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
க்ரோமா வலைதளத்தில் ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போனிற்கு 67.27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ. 38 ஆயிரத்து 999 விலையில் அறிமுகமான ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போன் ஆன்லைனில் ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ. 12 ஆயிரத்து 765 விலையில் கிடைக்கிறது.
இந்த விலை தவிர ஐ.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு மற்றும் மிட்நைட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
ஒப்போ ரெனோ 8T அம்சங்கள்:
6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
108MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
2MP ஜூம் கேமரா
32MP செல்ஃபி கேமரா
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒ.எஸ். 13
4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்