பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு சுமார் 16000 வேலை வெற்றிடங்கள் உள்ளன

103

அடுத்த வருடம் பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது, 16,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்கான திட்டமிடல்கள் துரித கதியில் இடம்பெற்று வரும் நிலையில், தற்காலிக பணியாளர்களின் சேர்க்கையும் இடம்பெற்று வருகிறது.

 வரவேற்பு, உணவு தயாரிப்பார்கள் – பரிமாறுபவர், தங்குமிடங்களில் பணியாற்றும் உதவியாளர்கள், மைதான தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள், சாரதிகள், பாதுகாப்பாளர் என பல்வேறு துறைகளில் இந்த பணியாளர்கள் கோரப்பட்டுள்ளனர். இதுவரை இந்த பணிகளுக்காக 10,000 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், மேலும் 6,000 பேருக்கான வெற்றிடம் இருப்பதாக ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

Join Our WhatsApp Group