14 வயது சிறுமியிடம் மோசமாக நடந்துகொண்ட தந்தை சுட்டுக்கொலை!

27

பாகிஸ்தானில் 14 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையை சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நகரில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இச் சம்பவத்துடன், தொடர்புடைய சிறுமி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.இதன்போது, தனது தந்தை தன்னை கடந்த மூன்று மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த குறித்த சிறுமி, தனது தந்தையை கொலை செய்வது என முடிவெடுத்துள்ளார்.பின்னர் தந்தையின், துப்பாக்கியினால் அவரையே சுட்டுக்கொலை செய்துள்ளார் என பாகிஸ்தான் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையை பொலிஸார் கைது செய்ததுடன், அவருக்கு் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group