சரவணனை சந்தித்த வேட்டையன்.. ஏன் தெரியுமா?

10

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படம் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராகவா லாரன்ஸ், “என் தலைவர் மற்றும் குரு ரஜினியை சந்தித்து ‘ஜெயிலர்’ வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். ‘சந்திரமுகி- 2’ 28-ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அவரிடம் ஆசிப்பெற்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Join Our WhatsApp Group