இந்தியாவில் அடுத்த மாதம் உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க உள்ள பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் இழுபறி நீடித்தது.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்குவதில் கால தாமதம் செய்வதாகவும், இது உலகக் கிண்ண போட்டிக்கு தங்கள் அணி தயாராவதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் செய்தது.
இந்த நிலையில் விசா பிரச்சினை நேற்று தீர்ந்தது. அதன்படி பாகிஸ்தான் அணி நாளை அதிகாலை துபாய் வழியாக ஐதராபாத் செல்கிறது. 29ஆம் திகதி ஐதராபாத்தில் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை சந்திக்கிறது.