இந்தியா-கனடா பூசல்: கனடிய சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்

22

கனடிய சீக்கியர்கள் இந்தியாவின் துணைத் தூதரகங்களுக்கு வெளியே சிறிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும் புதுடில்லிக்கும் தொடர்பிருப்பதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) ஒரு வாரத்துக்குமுன் குற்றஞ்சாட்டியிருந்தார்.டொரொன்ட்டோவில் (Toronto) சுமார் 100 ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்தியக் கொடிக்குத் தீ வைத்தனர்.

வான்கூவர் (Vancouver) துணைத் தூதரகத்திற்கு வெளியிலும் சுமார் 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.100க்கும் குறைவானோர் தலைநகர் ஒட்டாவாவில் (Ottawa) உள்ள இந்தியத் தூதரகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கனடா தொடர்ந்து இந்தியாவுக்கு நெருக்குதல் அளிக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பஞ்சாப்பை அடுத்து கனடாவில்தான் அதிகமான சீக்கியர்கள் வசிக்கின்றனர்.அங்கு ஏறக்குறைய 770,000 சீக்கியர்கள் உள்ளனர்.

Join Our WhatsApp Group