ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் பெற நடவடிக்கை

42

பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து கொள்கை அடிப்படையிலான விசேட கடன் வசதிகளைப் பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 02 துணை வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீதம் கொள்கை அடிப்படையிலான 02 கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளது. 

அதன் முதலாவது துணை வேலைத்திட்டத்தின் கீழ் நெருக்கடி முகாமைத்துவ பணிவரைபு மற்றும் நிதிப்பிரிவின் உறுதிப்பாட்டை மேம்படுத்தலுக்காக துரித மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், இரண்டாவது துணை வேலைத்திட்டத்தின் கீழ் மீள்தகவு கொண்ட அனைத்தையும் உள்ளடக்கிய நிதி முறைமையொன்றைக் கட்டியெழுப்புவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

 முதலாவது துணை நிகழ்ச்சித்திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் 2% வீதமான வருடாந்த வட்டி வீதத்தில், 05 வருட சலுகைக் காலம் உள்ளடங்கலாக 25 வருடகால மீள்செலுத்தல் தவணைக் காலத்திற்குக் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Join Our WhatsApp Group