அக்டோபரில் தொடங்கும் விஜய் படத்தின் பூஜை

26

’லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘தளபதி 68’ என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படவுள்ளது. இப்படத்தின் பணிகளுக்காக அமெரிக்க சென்றிருந்த விஜய் சமீபத்தில் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தளபதி 68’ படத்தின் பூஜையை அக்டோபர் முதல் வாரத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Join Our WhatsApp Group