இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்; பைடனுக்கு காங்கிரஸ் கடிதம்

19

பல தசாப்தங்களாக சித்திரவதைகள், இராணுவ துஷ்பிரயோகம் மற்றும் நாட்டின் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பிற “கொடூரமான குற்றங்கள்” உட்பட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு இலங்கையை முறையாக பொறுப்பேற்க செய்யும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

காங்கிரஸின் 12 உறுப்பினர்கள் ஜோ பைடன் நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

காங்கிரசின் 12 உறுப்பினர்கள் கையொப்பமிடப்பட்ட கடிதம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கனுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அந்த கடிதத்தில் ஐ.நா.வின் 30ஆவது சரத்தின் கீழ் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையால் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியவில்லை எனவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group