இயக்குனர் பாலாவின் வணங்கான்.. வேற லெவல் அப்டேட் வெளியீடு

17

இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தில் அருண் விஜய் நடிக்கிறார்.

இந்த படத்தில் சமுத்திரகனி, இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 25-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் வணங்கான் படத்தில் அருண் விஜய், ரோஷினி, சமுத்திரகனி, இயக்குனர் மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சூர்யா மேற்கொள்கிறார்.

முதலில் வணங்கான் படத்தில் சூர்யா நடிக்க முடிவு செய்து, படத்திற்கான படப்பிடிப்பும் நடந்தது. அப்போது இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்து வந்தார். பிறகு, இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சூர்யா மற்றும் 2டி நிறுவனம் அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை முதலில் இயக்குனர் பாலா வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group