தம்பதெனிய சிறிகல பிரதேசத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குருநாகல் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் பொதுப் பரீட்சையில் 09 ஏ சித்திகளைப் பெற்று கல்வி கற்கும் குறித்த மாணவன் வகுப்பில் முதலாவது மாணவனாக வர முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், மாணவன் சில மாதங்களாக தன்னை பாடசாலையில் ஒன்றாக கல்வி கற்கும் சக மாணவர்கள் விலக்கி வைத்ததாக பெற்றோரிடம் தெரிவித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மாணவன் பெற்றோர் வீட்டை விட்டு வெளியே சென்ற போது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும், கலவன் பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர தரம் வரை படித்துள்ள இம்மாணவன், ஆண்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.