பிரபல உணவகம் ஒன்றில் ரோல்ஸுக்குள் பிளாஸ்டிக் முட்டை…

28

அளுத்கம பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட ரோல்ஸில் பிளாஸ்டிக் அல்லது இறப்பருக்கு நிகரான முட்டை இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடானது அளுத்கம சுகாதார பரிசோதகரிடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாத தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளர் மற்றொரு நபருடன் அளுத்கம பிரதேசத்தில் உள்ள உணவகத்திற்குச் சென்று 1230 ரூபாய்க்கு முட்டை ரோல்ஸ், பணிஸ் , மீன் ரோல்ஸ் போன்ற சிற்றுண்டிகளை வாங்கியுள்ளார்.இதன்போதே கொள்முதல் செய்யப்பட்ட ரோல்ஸில் முட்டை போன்ற வெள்ளை நிற இறப்பர் போன்ற பொருள் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group