நடிகரும், பிரபல யூ டியூபருமான டிடிஎஃப் வாசன் கைது

30

நடிகரும், பிரபல யூ டியூபருமான டிடிஎஃப் வாசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சமூகவலை தளத்தில் பிரபலமானவர் வாசன், இவர் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வாசன் அண்மையில் பைக்கில் வீலீங் செய்து சாகசம் செய்ய முயற்சித்த போது விபத்தில் சிக்கினார்.

இது தொடர்பான வீடியோ வைரலானதும், இவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் காவல்துறை இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் டிடிஎஃப் வாசன் கைதாகியுள்ளார்.

Join Our WhatsApp Group