குவைத்தில் தஞ்சமடைந்திருந்த மேலும் 31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

23

குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக விமான அனுமதியின் கீழ் இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட இலங்கையர்களின் குழுவாகும்.

இவர்கள் இன்று காலை 06.16 மணியளவில் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்களில் 03 ஆண்களும் 28 பெண்களும் அடங்குவர்.

மேலும், கடந்த 12 ஆம் திகதி குவைத்தில் இருந்து 33 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 09 ஆண்களும் 24 பெண்களும் இருந்தனர்.

அதன்படி, இந்த இரண்டு வாரங்களில், குவைத்தில் வீட்டு வேலை செய்யச் சென்று விசா இல்லாமல் தங்கியிருந்த 64 இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள், இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம், குருநாகல், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group