கஜேந்திரன் எம். பி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை வேண்டுமென சபையில் கோரிக்கை

36

கஜேந்திரன் எம்.பி திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக்க கருணாரத்ன பயணம் செய்த கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் மகிந்த யாப்பா தலைமையில் கூடிய போது, செல்வம் அடைக்கல நாதன் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இந்த வேளை, சபைக்கு தலைமை தாங்கி கொண்டு இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோகினி கவி ரத்தின.
இந்த வேண்டுகோளை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக அவர் கூறினார். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்த வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

Join Our WhatsApp Group