உலக நோயாளர் பாதுகாப்பு தினம்: கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

45

நூருல் ஹுதா உமர்

“செப்டம்பர் 17 உலக நோயாளர் பாதுகாப்பு தினமாகும்”

உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைவாக கல்முனை பிராந்திய பொது சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம்.ஹில்மி அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (18) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சார்பில் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வளவாளராகக் கலந்துகொண்ட சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஹில்மி அவர்கள் நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் வைத்தியசாலைகளின் கட்டமைப்பு தொடர்பாகவும், சுகாதார தேவை கருதி வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு சுகாதாரத்துறையினர் ஆற்றவேண்டிய பணிகள் தொடர்பாகவும் விரிவுரை நிகழ்த்தினார்.

Join Our WhatsApp Group