இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சந்தோஸ் ஜா ?

16

கொழும்புக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சந்தோஸ் ஜா நியமிக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.சந்தோஸ் ஜா 2007-2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய பின்னரே பெல்ஜியத்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளதாக கூறப்படுகின்றன.இந்தியாவுடனான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

எனினும் அது பல காரணங்களால் நடைமுறைக்கு வரவில்லை. எனவே இந்த விடயத்தில் சந்தோஸ் ஜா மீண்டும் முக்கிய கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன் இரண்டாவது காரணமாக இலங்கை இந்தியாவிடம் பாரிய அளவில் கடன்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பொருளாதார உறவுகளை வளர்ப்பதில் அவரின் பங்கு முக்கியமானதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group