இங்கே மருந்துக்கும் கூட ஒரு முஹமதோ, முகுந்தனோ கிடையாது:ஒரு எம்பியின் ஆதங்கம்

30

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் கடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற ஆசியாக்கிண்ண இறுதிப் போட்டி தொடர்பாக மனோ கணேசன் எம். பி பேஸ்புக்கில் எழுதிய பதிவில் இருந்து…

என்னத்தான் இந்தியாவில் மத முரண்பாடுகள் இருந்தாலும், நம்ம நாடு, நம்ம வீரர்னு, முஹமத் சிராஜை முழு நாடும் இப்போ தலையில் வைத்து கொண்டுடாறாங்க.

இங்கே மருந்துக்கும் கூட ஒரு முஹமதோ, முகுந்தனோ கிடையாது.

இனவிகிதாசாரத்தில் அணி உருவாக முடியாதுதான். ஆனால் ஒருவர் கூட இல்லை என்பதை நம்ப முடியலை.

மனோகணேசன்

இதுதான் எனது ஆதங்கமும் கூட..

இலங்கையணியில் சேர்த்துக் கொள்வதற்கு எந்த முஸ்லிம் வீரர் தகுதியாக இருக்கிறார் என்று பலர் கேட்பது எனக்கு புரிகிறது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் பெரும்பாலும் முஸ்லிம் வீரர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதில்லை என்ற அனுபவத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் திறமை இருந்தாலும் கிரிக்கெட்டை ஒரு கட்டத்தோடு நிறுத்திக் கொள்வார்கள். பாடசாலை அணிகளில் திறமை காட்டிய எத்தனையோ வீரர்கள், கிளப் போட்டிகளில் திறமை காட்டிய எத்தனையோ வீரர்கள் தங்களிடம் திறமை இருந்தும் முஸ்லிம் என்பதற்காக அணியில் இடம் கிடைக்காது என்பதை அறிந்துகொண்டு காலத்தை விரயமாக்காமல் வேறு வேறு தொழில் துறைகளை தேடிக் கொள்கிறார்கள். கிடைக்காத ஒன்றிற்காக காலம் காலமாக ஏங்கிக் கொண்டிருப்பதை விட இதுதான் சிறந்த வழியும் கூட.

விஜயகாந்த் வியாஸ்காந்த் கடந்த சில வருடங்களாக LPL – Lanka Premier League போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும் இன்று வரை இலங்கை அணியில் இடம் வழங்கப்படவில்லை என்பது இந்தக் குற்றச்சாட்டுக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகும்.

இலங்கையின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான றிஸ்லான் இக்பார் கத்தார் நாட்டின் கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இது மற்றுமொரு எடுத்துக்காட்டாகும்.

எப்போதும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும், செல்வாக்குள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி இனத்தின் காரணமாகவும், மொழியின் காரணமாகவும் திறமையான சில சிறுபான்மை வீரர்களை புறக்கணித்து வருகின்றமையினால் ஏனைய நாடுகளைப் போன்று பல்லினங்களைக் கொண்ட ஒரு கிரிக்கெட் அணியாக இலங்கையை அணி இல்லை என்பது சர்வதேசம் அறிந்த உண்மை.

முரளிதரனுக்கும், மஹ்ரூபுக்கும் பின்னர் இனி இது எப்போது சாத்தியமாகுமோ தெரியாது.

இந்தியா கிரிக்கெட், சிராஜை ஒரு முஹம்மதாகப் பார்க்காமல் ஒரு இந்தியனாக பார்த்தார்கள். இனவெறியின் உச்சத்தில் இருக்கின்ற இந்தியாவில் கூட எப்பொழுதும் அணியில் குறைந்தது ஒரு முஸ்லிம் விளையாடிக் கொண்டிருப்பார். இந்தியா மட்டுமல்லாது தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், சிம்பாப்வே, ஸ்கோட்லாந்து போன்ற பல நாடுகளின் கிரிக்கெட் அணிகளில் சிறுபான்மையினரையும் உள்வாங்கி பல்லினங்களைக் கொண்ட ஓரணியாக திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இலங்கையில் இது ஒரு கனவாகவே இருந்து விடப் போகிறது.

சமூக வலைத்தளங்களில் சிங்களவர்கள் கூட ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்தி வருவதனை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.

“Not one country one nation, it’s one country one race”

By ரூமி ஹாரிஸ்.

Join Our WhatsApp Group