திலீபனின் நினைவு ஊர்தி மீதான இனவெறித் தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவில் போராட்டம்

35

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு , தேவிபுரம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

“தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல்“ குழுவின் ஏற்பாட்டில் தேவிபுரம், வள்ளிபுனம் கிராம மக்கள் முதன்மை வீதியில் ஒன்று கூடி போராட்டம் ஆரம்பமாகியிருந்தது.

Protest in Mullaitheev

கையில் பதாதைகளை தாங்கியவாறும் , எதிர்ப்பு கோஷங்களை வெளிப்படுத்தியும் வள்ளிபுனம் சந்தி வரை சென்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தியது மாத்திரமல்ல யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியமை கண்டனத்துக்குரியது என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் இது தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Protest in Mullaitheev

Join Our WhatsApp Group