தலையில் பந்துடன் 76 மீட்டர் உயரம் ஏறி நைஜீரிய ஆடவர் சாதனை!

14

தலைமீது காற்பந்து… ஆடாமல் அசையாமல் 76 மீட்டர் உயரமான அலைக்கொடிக் கம்பத்தின் ஏணியில் ஏறி கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளார் டோன்யே சாலமன் (Tonye Solomon).பந்தோ கீழே விழவே இல்லை.நைஜீரியாவைச் சேர்ந்த அவர் அந்தச் சாதனையைச் சென்ற மாதம் புரிந்ததாகக் கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு தெரிவித்தது.

அதற்காக அவர் இரு மாதங்கள் பயிற்சி செய்தார்.150 படிகள் கொண்ட ஏணியை 12 நிமிடங்கள் 30 வினாடிகளில் டோன்யே ஏறிவிட்டார்.பின்னர் அவர் மேலிருந்து பந்தைக் கீழே தூக்கி வீசியதாகக் கின்னஸ் உலகச் சாதனை இணையப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.சாதனை புரிவது சுலபமாக இல்லை என்று டோன்யே கூறினார்.தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததற்கு அவர் நைஜீரியத் தற்காப்புப் படைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Join Our WhatsApp Group