கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது

17

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் , தியாக தீபம் திலீபனின் உருவப்படத்துடன் வந்த ஊர்தியின் மீதும் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை சர்தாபுர பகுதியில் நேற்று மாலை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் மீதும் , தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்தி மீதும், இலங்கை தேசிய கொடியுடன் வந்த ஒருசிலர் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சீனக் குடா பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் முறைப்பாடொன்றை அளித்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட விசாரணைகளின்படி, ஐந்து சந்தேகநபர்களை சீனக் குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான ஐந்து சந்தேகநபர்களையும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சீனக் குடா பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group