இலங்கைக்கு அடுத்த வாரம் வரவிருக்கும் 2000 மஞ்சள் காமாலை தடுப்பூசிகள்

13

மஞ்சள் காமாலைக்கு பயன்படுத்தப்படும் 2000 தடுப்பூசிகள் இந்த வாரத்தில் இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த தடுப்பூசிகள் யுனிசெஃப் மூலம் வாங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு சுமார் ஆறாயிரம் மஞ்சள் காமாலை தடுப்பூசிகள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிற நாடுகளில் இருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்லும் அனைத்து குடிமக்களும் இந்த தடுப்பூசியைப் பெற வேண்டும்.

அந்த நாடுகளுக்குச் செல்வதற்காகக் காத்திருக்கும் கிட்டத்தட்ட ஐயாயிரம் இலங்கையர்கள் இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருப்பதாக சுகாதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

Join Our WhatsApp Group