இன்று விநாயகர் சதுர்த்தி

13

** விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை- பக்தர்கள் தரிசனம்

**ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைக்கு அபிசேகம்

தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா, இன்று அதிகாலை முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் காலையில் அபிசேகம் செய்யப்பட்டு, அலங்கார கோலத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் காலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் புளியகுளத்தில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைக்கு அபிசேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும், தமிழகத்தில் உள்ள பிரபலமான விநாயகர் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே ஆங்காங்கே பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர். சென்னையில் 4 ஆயிரம் இடங்களில் பிள்ளையார் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் சுமார் 2 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு கழித்து குளங்கள் போன்ற இடங்களில் இந்த சிலைகள் கரைக்கப்படும்

Join Our WhatsApp Group