பிரேசிலில் சோகம் – விமான விபத்தில் 14 பேர் பலி

15

பிரேசில் நாட்டின் வடக்கு அமேசான் மாநிலத்தில் விமானம் விபத்தில் சிக்கியது.
இதில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர் என அம்மாநில ஆளுநர் தெரிவித்தார்.
சாவ் பாவ்லோ:

பிரேசில் நாட்டின் வடக்கு அமேசான் மாநிலத்தில் சனிக்கிழமை நடந்த விமான விபத்தில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர் என அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில் நடந்துள்ளது.

இதுதொடர்பாக, ஆளுநர் வில்சன் லிமா கூறுகையில், பார்சிலோசில் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 ஊழியர்கள் பலியானது அறிந்து வருந்துகிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group