கேம் சேஞ்சர்’:ரூ.15 கோடி போச்சே.. பாட்டு லீக் ஆனதால் அப்செட் ஆன ஷங்கர்*

23

இயக்குனர் ஷங்கர் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

லீக்கான பாடல்

இந்நிலையில், ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜாபிலம்மா’ என்ற பாடல் ரிலீஸாகுவதற்கு முன்பே சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த பாடல் லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. மேலும், இந்த பாடலை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

Join Our WhatsApp Group