அக்ஷர் வௌியேற்றம், சுந்தர் அணியில்

16

ஆசியக்  கிண்ண இறுதிப் போட்டியில் இருந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் வெளியேற்றப்பட்டதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் (15) நடைபெற்ற இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அக்ஷர் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அவரது கையில் சுளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த போட்டியில், பந்து அக்ஷரின் கையில் பட்டதால், இந்த காயம் ஏற்பட்டுள்ளது.

எனினும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது எலும்புகளில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்ஷர் பட்டேலுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் சகலதுறை வீரர் வொஷிங்டன் சுந்தர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Join Our WhatsApp Group