ஹரக்கடாவுடன் துபாய் செல்ல திட்டமிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்-ஒரு கோடிக்கும் மேல் பணத்தை பெற்றுள்ளார்

23

ஹரக்கடாவுடன் துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்று ஆடம்பர வாழ்க்கையை வாழும் நோக்கிலேயே பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு, ஹரக்கடா தப்பிச் செல்லும் திட்டத்திற்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் உதவியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் இருந்து வெளியில் வந்த பின்னர், ஹரக்கடா மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரை அழைத்துச் செல்ல பாதாள உலக குழுவினர் வெளியில் ஆடம்பர வாகனம் ஒன்றில் காத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்லும் திட்டம் மற்றும் தனக்கு செய்த அனைத்து உதவிகளுக்காகவும் ஹரக்கடா, பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பணத்தை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தற்போது காணாமல் போயுள்ளதுடன் அவரை கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

சந்தேக நபர்,ஹரக்கடாவிடம் பெற்றுக்கொண்ட பணத்தில் 20 லட்சம் ரூபா மற்றும் 18 லட்சம் ரூபாவை இரண்டு சந்தர்ப்பங்களில் தனது தாயாரிடம் வழங்கியுள்ளதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல ஹரக்கடா மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Join Our WhatsApp Group