பாராளுமன்றத்திற்கு புதிய பிரதி செயலாளர் நாயகம் நியமனம்

65

பாராளுமன்றத்திற்கு புதிய பிரதி செயலாளர் நாயகமாக சட்டத்தரணி சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அனுபவமிக்க நிர்வாக அதிகாரியான சட்டத்தரணி சமிந்த குலரத்னவை புதிய பிரதி செயலாளர் நாயகமாக நியமித்துள்ளார்.

சமிந்த குலரத்ன, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மேலதிக செயலாளராகவும், பிரதமரின் செயலாளர் மற்றும் அரசாங்கத்தின் தலைமை கொறடாவின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

மேலும், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலத்தின் ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ருவன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷயர் பல்கலைக்கழகங்களில் வணிக மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

Join Our WhatsApp Group