சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகள் இருவருக்கு உயர் பதவி நியமனங்கள்

46

**சாதி, மதத்திற்கு அன்றி தகுதிக்கே முன்னுரிமை

வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பதில் செயலாளராகவும் ஏ. மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் எம்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் குறித்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஆளுநரை பொறுத்தமட்டில் கடந்த மூன்று மாத காலமாக, மதம் சார்ந்து எந்தவொரு நியமனங்களும் வழங்கப்படவில்லை எனவும், தகுதி மற்றும் திறமைகளை அடிப்படையாக கொண்டு அரச நியமனங்களை அவர் வழங்கி வருவதாகவும், இந்நியமனங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் கிழக்கு மாகாணத்தின் அனைத்து நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களும் முஸ்லிம்களின் கையில் உள்ளதாகவும் ஆளுநர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group