மலையக மக்களுக்கு குடியேற்றத்தை அமைக்கா விட்டால் பேரழிவையே சந்திக்கும்: அருட்தந்தை மா.சத்திவேல்

36

மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் குடியேற்றத்தை ஏற்படுத்த பலமான திட்டத்தை வகுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் அடையாளம் மட்டுமல்ல மலையக சமூகமே பேரழிவையே சந்திக்கும் என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (15.09.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மலையக மக்கள் இலங்கை மண்ணில் 200 வருட வரலாற்று வாழ்வின் நிறைவை பல்வேறு நிகழ்வுகளுக்கு ஊடாக அடையாளப்படுத்தி கொண்டிருக்கையில் பெருந்தோட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தோட்ட உரிமையாளர்கள் வரலாற்று நிகழ்வுக்கு சவால் விடுவது போன்று அடாவடித்தனத்தில் ஈடுபடுவதையும், இனவாத முகத்துடன் குண்டர்களை ஏவி விட்டு மலையக தொழிலாள வர்க்கத்தை வன்முறைக்கு இழுப்பதையும் அரசு தொடர்ந்தும் அனுமதிக்க கூடாது.

பெரும் தோட்ட தொழிலாளர் வர்க்கத்தை சிறுதோட்ட உரிமையாளர்களுடைய கோரிக்கைகளை பல்வேறு மட்டத்தில் எழுப்பிக் கொண்டிருக்கையில் ரம்போடை, மாத்தலை, தெனியாய, ரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் வீட்டை விட்டு போ என்பதும் தொழிலாளர்கள் தாம் கட்டிய வீடுகள் உடைத்து அவர்களை மண்ணில் அன்னியர்களாகவும் கூலிகளாகவும் அடிமைகளாகவும் நடத்துவதை தோட்ட நிர்வாகங்கள் நடாத்துவதை அரசும், தொழிற்சங்கமும், மலையக கட்சிகளும் தலையிட்டு முழுமையாக நிறுத்த வேண்டும்.

நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் மலையகத் தமிழர்களின் இரும்புக்கும், கோரிக்கைகளுக்கும் எதிரான நீண்டகால இனவாத செயற்பாடுகளின் தொடர்ச்சி மட்டுமல்ல தொடர்ந்து நிலத்திற்கும் வீடுகளுக்கும் உரிமையற்ற அனாதைகள் என்றே கூறுவதாக தோன்றுகின்றது. என அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

Join Our WhatsApp Group