மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65 : அமைச்சரவைக்கு புதிய யோசனை

40

நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டு மொத்த மூளை சாலிகள் வெளியேற்றம் சுகாதாரத் துறையில் சில தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதால், அதற்கு மற்றுமொரு தீர்வாக, 63 வயதுடைய ஓய்வுபெறும் வயதிற்கு மேலதிகமாக, மருத்துவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அவர்கள் விரும்பும் அடிப்படையில் இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த பொதுச் சேவையினரின் ஓய்வு வயது 60 ஆக இருந்தாலும், நாட்டில் சுகாதாரத் துறை சந்திக்க வேண்டிய சில பாதிப்புகள் காரணமாக மருத்துவர்களின் ஓய்வு வயது 63 ஆக நீடிக்கப்பட்டது. அதன்படி, ஒப்பந்த அடிப்படையில் அவர்களது சேவை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும்.

Join Our WhatsApp Group