மதவாச்சியில் 25 வயது இளைஞன் பொல்லால் அடித்துக் கொலை

24
  • தந்தையும் மூத்த சகோதரனும் கைது

மதவாச்சி கனந்தராதிவுள்வெவ பகுதியிலுள்ள வீடொன்றில் 25 வயதுடய இளைஞன் ஒருவரை பொல்லால் அடித்து கொலைசெய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மதவாச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (14) இரவு மதவாச்சி பொலிஸ் பிரிவின் கனந்தராதிவுள்வெவ பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் தனது தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனையின் போது வாய்த்தர்க்கம் முற்றியதால் தந்தையும் மூத்த சகோதரனும் பொல்லால் அடித்து இக்கொலையினை செய்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதணைகளை மேற்கொள்ளுவதற்காக சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடய 56 வயது மற்றும் 27 வயதுடய சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Join Our WhatsApp Group