தயாரிப்பாளர் இலாபம் சம்பாதித்தால்தான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும் – ஜி.வி.பிரகாஷ்

40

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அடியே’. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘அடியே’. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் மகேந்திர பிரபு, இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், ஜி.வி.பிரகாஷ் குமார், கவுரி ஜி. கிஷன், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பாளர் முத்தையன் ஆகிய படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Join Our WhatsApp Group