சீனாவில் ராட்சத டவர் கிரேன் திடீரென சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு!

17

சீனாவில் ராட்சத டவர் கிரேன் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சீனா – ஜியான்யாங் மாகாணத்தில் உள்ள துவோ ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.வழக்கம்போல் நேற்றைய தினம் இந்த பணி நடைபெற்று கொண்டிருந்தவேளை ராட்சத டவர் கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.

இதில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group