கிரீமியாவில் ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அழிப்பு- உக்ரைன் தகவல்

30

தொலைவில் இருந்து உக்ரைன் இலக்குகள் நோக்கி ஏவுகணைகள் வீசப்படுகின்றன.
ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலை உறுதிபடுத்தவில்லை.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய கருங்கடல் பகுதியில் செவாஸ்டோபோல் கிரீமியா துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இந்த துறைமுகப்பகுதியை ரஷியா தனது வான் வெளி தாக்குதலுக்கு பயன்படுத்தி வருகிறது. தொலைவில் இருந்து உக்ரைன் இலக்குகள் நோக்கி ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

இந்நிலையில் கிரீமியாவில் ரஷியாவின் 2 போர்க்கப்பல்களை தாக்கி வான் பாதுகாப்பு அமைப்பை அழித்துவிட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து உள்ளது. ஆனால் ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலை உறுதிபடுத்தவில்லை. 5 கடல் டிரோன்கள் மூலம் சம்பந்தப்பட்ட தாக்குதலை முறியடித்துவிட்டதாக ரஷியா தெரிவித்து இருக்கிறது. இந்த தாக்குதலில் சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

Join Our WhatsApp Group